காதலர் தினத்தை டார்கெட் வைத்து ரிலீஸாகும் படங்கள்…. !

காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களை கவர பிப்ரவரி மாதம்  புதிய படங்கள் ரிலீசாக உள்ளது…

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம்  ரசிகர்களின் மனதை தொடும் அளவிற்கு படங்கள் எதுவும் இல்லை.. ரஜினியின் தர்பார் தனுஷின்  பட்டாசு ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்  பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள் ரசிகர்களை மகிழ்விக்குமா.. ?  

பிப்ரவரி மாதம் என்றால்  காதலர்களுக்கான மாதம் என்றுதான் சொல்லவேண்டும்.. பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே என  தொடங்கி 14 காதலர் தினம் வரை இளைஞர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.. இதற்கிடையில் பிப்ரவரி மாதம் காதலர்கள் ஜோடியாக திரையரங்கு செல்ல பல படங்கள் ரிலீசாக உள்ளன.
வானம் கொட்டட்டும்

மணி ரத்னம் தயாரிப்பில் தானா இயக்கத்தில் விக்ரம் பிரபு ,மடோனா செபாஸ்டியன்,ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு , சரத்குமார் ,ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும்  படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது…

சீறு

விஜய் சேதுபதியின் ரெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கத்திலும் ஜீவா நடிப்பிலும் உருவாகியுள்ள சீறு படம் பிப்ரவரி 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது…

ஓ மை கடவுளே

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ள ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் ரித்திகா சிங் நடித்துள்ள,இப்படம்  காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது..

நான் சிரித்தால்

ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஐஸ்வரியா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள நான் சிரித்தால் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது..

மேலும் தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ஜானு படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது..

காதலர் தினத்தை முன்னிட்டு வந்த படங்கள் ரசிகர்களை கவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது..

Exit mobile version