திருப்பத்தூரில் அமல அன்னை ஆலயத்தின் கொடியேற்ற விழா

திருப்பத்தூரில் உள்ள தூய அமல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தூய அமல அன்னை ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில்
ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். நவநாட்களாக கருதப்படும் இந்த 9 நாட்களிலும் அன்னை வேளாங்கண்ணி, புனித அமல அன்னை, புனித சவேரியார், புனித அந்தோனியார் என தினந்தோறும் அமல அன்னைக்கு திருப்பலி நடத்தப்படும். 8ம் தேதி அமல அன்னையின் தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும்.

 

Exit mobile version