மறைந்த நெல் ஜெயராமனின் ஆராய்ச்சி பண்ணையில் நடந்த நெல் அறுவடை திருவிழா

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஜெயராமனின் ஆராய்ச்சி பண்ணையில் நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் மறைந்த நெல் ஜெயராமனால் தொடங்கப்பட்ட இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் 10 ஆண்டுகளாக பொங்கல் தினத்தை முன்னிட்டு நெல் அறுவடை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய் பாதிப்பு காரணமாக நெல் ஜெயராமன் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து 11-ம் ஆண்டு நெல் அறுவடை திருவிழா திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்க பண்ணையில் நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்த விவசாயிகள், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு செய்தனர். இதில் இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Exit mobile version