பதினாறாவது நிதியறிக்கையினை தாக்கல் செய்தார் பியூஸ் கோயல்

2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக அவை கூடியதும் தெலுங்கு தேச எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் பியூஸ் கோயல் நிதியறிக்கையினை படிக்க தொடங்கிய சிறிது நேரத்தில் அவை அமைதியானது. 5 வருடங்களில் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக அவர் தெரிவித்தார். 2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அவர் கூறினார். 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் குறைந்துள்ளதாக கோயல் கூறினார். 5 வருடங்களில் 23ஆயிரத்து 900 கோடி ரூபாய் அந்திய முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. வாராக்கடன் 3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்தார். நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி.எஸ்.டி அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version