தவறான தகவல் பரப்புவோர் குறித்த தகவல்களை தரும்படி வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை

தவறான தகவல் பரப்புவோர் குறித்த தகவல்களை தரும்படி வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொது அமைதி பல்வேறு சமயங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன் ஒருபகுதியாக தவறான தகவல் பரப்புவோர் குறித்த தகவல்களை தரும்படி வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.

இந்தநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவுக்கு என தனி குறைத்தீர் அதிகாரியை நியமித்திருப்பதாக கூறிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தவறான தகவல் பரப்பப்படுவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து அந்நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸிடம் விளக்கி கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version