போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, விபத்துகளில் இருந்து உயிர்களை காக்கவே அபராத தொகை உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார். அபராத தொகையிலிருந்து வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற அவசியம் மத்திய அரசுக்கு இல்லை என தெரிவித்த அவர், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மட்டும் தான், அபராத தொகை உயர்த்தப்பட்டதற்கு குறித்து கவலைப்பட வேண்டும் என தெரிவித்தார். திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மூலம், லஞ்சம் அதிகரிக்காது என்றும் நிதின் கட்காரி விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.