மத்திய பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 17ம் தேதி மக்களவை கூடியதும், புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 19ம் தேதி சபநாயகர் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜூன் 20ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தி இருப்பதாக தெரிவித்தார். ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.