ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மரவபாளையம் பகுதியில் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி விரைவாக நடைபெற்று வருகின்றது.
தமிழத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், முதல்வரின் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள, அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மரவபாளையம் பகுதியில், தொடர் மழை பெய்து வந்த போதிலும் ஏரிகள், தடுப்பணைகள், நீர்வழிப் பாதைகள், தூர்வாரும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.
தற்போது மழைக்காலம் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எதிர் வரும் மழை காலங்களில், நீர் நிலைகளில் அதிக அளவு நீர் சேமிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சத்தி இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.