ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் மிளகாய்களை உலற வைக்கும் களம் அமைத்துத் தர விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்
பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு மிளகாய் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில், இந்த ஆண்டு பெய்த மழை மற்றும் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரால் மிளகாய் விளைச்சல் சீராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மிளகாய்களை உலர்த்துவதற்கு உலர் களம் வசதி இந்த பகுதியில் இல்லாததால், மிளகாயை வைகை ஆற்றின் கண்மாய் கரை ஓரங்களில் மணலில் உலர வைத்துள்ளனர். எனவே தமிழக அரசு இந்த பகுதிகளில் மிளகாய் உலர்த்த களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.