சம்பங்கி பூவில் அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் சம்பங்கி பூ பயிரிட்டு அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்கலம் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூ விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி சம்பங்கி பூ பயிரிட்டு அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். சம்பங்கி பூ பயிர் 3 வருட பயிர் என்பதாலும், இதற்கு குறைந்த அளவு தண்ணீர், உரம், வேலையாட்கள், பூச்சி மருந்து இருந்தாலே போதுமானது என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பூ திருவண்ணாமலை பூ மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு ஒரு கிலோ பூ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version