பரமத்திவேலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 38 மில்லிமீட்டர் மழை பதிவானது.இந்த சூறாவளிக்காற்றினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. கடன் பெற்று நடவு செய்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.