சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த நீர் மற்றும் பராமரிப்பில் பயிரிடப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கனபாபுரம் கிராமத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயிரிட்டு வருகிறது. குறைந்த நீரும் மற்றும் பராமரிப்பும் இருந்தாலே போதும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 90 நாட்களுக்கு பிறகு சர்க்கரை வள்ளிக் கிழங்கு வெட்டி எடுக்கப்பட்டு வியாபாரிகளிடம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த பயிர் 3 மாத பயிராகும் இதில் 50 சென்ட் நிலத்தில் 400 முதல் 500 கிலோ வரை வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த பயிர் செலவினங்கள் போக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version