நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நூதன முறையில், 57 பவுன் நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சிபி என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இவர் மீது மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.