புகழ்பெற்ற மிஸ் கூவாகம் 2019 நிகழ்ச்சி விழுப்புரத்தில் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருநங்கைகள் குவிந்துள்ளனர். புகழ் வாய்ந்த மிஸ் கூவகம் 2019 நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருநங்கைகளுக்கான அறிவுசார் போட்டிகள், நடனம், நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு நாளை மாலை நடைபெறவுள்ளது.