பிரபல லஷ்மணன் ஸ்ருதியின் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

உடல்நலக் குறைவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட   லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமனின் உடலிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அஷோக் நகரில் உள்ள லஷ்மன் ஸ்ருதி என்னும்  இசைக் கருவிகள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ராமன் நெஞ்சு வலி மற்றும் பிற உடல் உபாதைகளால் கடந்த ஒரு வார காலமாக அவதியடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேனாம்பேட்டையில் நடைபெற்ற  ‘ சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியிலிருந்து ராமன் தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு  சென்ற அவர்  வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராமன்   மின் விசிறியில் தூக்கில் தொங்கியப் படி பிணமாக கிடந்துள்ளார். லஷ்மண் சுருதி ராமனின்  மர்ம மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ராமனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராமனின் உடல் இன்று மாலை 4 மணியளவில் ஏ.வி.எம். மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

Exit mobile version