கோவை அருகே பொதுமக்களுக்காக மரம் வளர்த்து வரும் குடும்பத்தினர்

கோவையை சேர்ந்த குடும்பத்தினர் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய முள் சீத்தாப்பழம் மற்றும் அதன் இலைகளை தோட்டமாக பயிரிட்டு தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர் .

புற்று நோய்க்கு மருந்துகளை விட முள் சீத்தாப்பழம் ஆயிரம் மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்டது என சித்த மருத்துவம் கூறுகிறது. ‘கேன்சர் கில்லர்’ என அழைக்கப்படும் முள் சீத்தாப்பழம் வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள், கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக இது விளைகிறது. இது பலாப்பழம் போல் முட்கள் கொண்டுள்ளதால் ‘பலா ஆத்தா’ எனவும் அழைக்கிறார்கள். முள் சீத்தாப்பழத்தின் இலைகள் பட்டை, மரம், பழம், விதை, வேர் என தாவரத்தின் எல்லா பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

இதில் உள்ள அசிட்டோஜெனின் என்ற மருந்துப் பொருளே இதன் அபூர்வ மருத்துவத் தன்மைக்கு காரணமாக விளங்குகிறது. இந்த பழங்களில்தான் மருத்துவ குணம் அதிகம். முள் சீத்தாப் பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப் பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான ஆபத்தினையும் இந்த பழங்கள் ஏற்படுத்துவதில்லை என்பது இதன் சிறப்பாகும்.
 
கோவை துடியலுர் அருகே உருமாண்டம்பாளையம் பகுதியில் வசித்துவரும் கெளதம்பிரபு, தனது தந்தையின் நினைவாக தென்னந்தோப்பில் மரங்களுக்கு இடையே சுமார் 150க்கும் மேற்பட்ட முள்சீத்தா மரங்களை நடவு செய்து அதற்கு சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சி வளர்த்து வருகின்றனர்.

இதில் காய்க்கும் முள் சீத்தாப்பழங்கள் மற்றும் அதன் இலைகள் தேவைப்படுவோர் அணுகினால், அவர்களே தோட்டத்தில் சென்று பறித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர். ஒரு நபருக்கு தலா 3 பழங்கள் என பறித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார் கெளதம் பிரபு. இதற்கென கட்டணம் ஏதும் அவர் வசூலிப்பது இல்லை. இதனை பயன்படுத்தி பலர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து குணம் அடைந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

பிறர் நலன் கருதி சீத்தா மரங்களை பராமரித்து, அதில் கிடைக்கக் கூடிய பழங்களை இலவசமாக பிறருக்கு வழங்கி வரும் கெளதம்பிரபுவின் குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version