பொங்கல் சீசன் தொடங்கும் நேரத்தில் வாழை தார்களின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது கவலை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் முக்கிய விவசாயமாக வாழை விவசாயம் இருந்து வருகிறது. அங்கே அறுவடை செய்யும் வாழைத்தார்கள் உள்ளூர் சந்தைகள் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கஜா புயலால் வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதற்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இருப்பினும் பொங்கல் சீசன் நெருங்கும் வேளையில் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 200 ரூபாய்க்கு விலை போகக்கூடிய வாழைத்தார்கள், தற்போது வெறும் 50ரூபாய்க்கும் 70க்கும் விலை போவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.