ஈரோட்டில் மாநகராட்சி பெயரில் போலியான ரசீது தயாரித்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கைகாட்டி வலசையை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்திற்கு மாநகராட்சிக்கான வரி செலுத்தி தருவதாக கூறியுள்ளார். இதற்காக 72 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளார்.
ஜீவானந்தம் கொடுத்த ரசீது போலி என அறிந்த தங்கராஜ், இது குறித்து மாநகர போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பல்வேறு முகவரியில் உள்ள ஆதார் அட்டைகள், பான்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.