நாகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பிரசாரம் பாதியில் கைவிடப்பட்டது.
நாகூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக கூட்டணி கட்சியினர் இரு பிரிவாக அங்கு வந்திருந்தனர். இதில் வேட்பாளருக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட போட்டி மோதலாக மாறி கைகலப்பு வரை சென்றது. இதனால் பிரசாரத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
திமுகவினரின் அராஜகத்தால் கூட்டணி கட்சி வேட்பாளர் செல்வராசு பிரசாரத்தில் பாதியில் கைவிட்டு திரும்பி சென்றார். தேர்தலுக்கு முன்னரே திமுக கூட்டணி கட்சியினரின் ஒற்றுமையின்மை வெளிப்படுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.