கொரோனா வைரஸ் ஆரம்ப மாதிரிகளை அழித்தது உண்மை – சீனா ஒப்புதல்

சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக சீனா கூறி வரும் நிலையில், கொரோனா வைரஸ் செயற்கையாக வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதென அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா பல உண்மைகளை மறைத்து விட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரசின் ஆரம்ப கால மாதிரிகள் அழிக்கப்பட்டு விட்டதாக சீனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதியே பொது சுகாதார சட்டத்தின்படி அவற்றை அழிக்க உத்தரவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி லி டென்ஃபங்க் தெரிவித்துள்ளார். எனினும் எத்தனை ஆய்வகங்கள் ஆரம்ப மாதிரிகளை அழித்தது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்பதை உலகிற்கு கூறாமல் சீனா மௌனம் சாதித்ததாகவும், கொரோனா வைரஸ் விவகாரத்தில் மர்மம் உள்ளதாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக சீனாவின் அண்மை தகவல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version