தீவிரவாத பிரச்சனையில் இறுதிவரை பொறுத்துக்கொண்டே இருக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு படை துவங்கியதன் பொன்விழா கொண்டாட்டம் டெல்லியில் உள்ள காசியாபதாத் ராணுவ முகாமில் நடைபெற்று வருகிறது. இதற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பை உற்சாகத்துடன் கண்டுகளித்தார். இதில் காவல் துறை மற்றும் தீயணப்பு துறையில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.
முன்னதாக ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தார் மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் பேசிய மோடி, தீவிரவாத பிரச்சனையில் இறுதிவரை பொறுத்துக்கொண்டே இருக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் பாகிஸ்தானை மறைமுகமாக அவர் குற்றம்சாட்டினார்.