மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டிற்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் விண்ணப்பிக்கும் தேதி கடந்த ஜனவரி 10ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டித்து ஜனவரி 31ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது
அம்மா இருசக்கர வாகன திட்டம் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் பணியில் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய் இருக்கவேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
கடந்த ஆண்டு (2017-18) அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 7,225 பெண்கள் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கது.