தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்…

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.

இந்தநிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் நாளிலேயே 2019 – 20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. புதிய வரிகள் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டும் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தனது 8 வது பட்ஜெட்டை, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version