வங்கிகள் விரைவில் வட்டிக் குறைப்பை அறிவிக்கலாம் என்று எதிர்பாப்பு

வங்கிகள் தங்கள் வடிக்கையாளர்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியே ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்தத்தைக் குறைக்கும் போது அதனால் வங்கிகளின் செலவுகள் குறைவதால், அவையும் தங்கள் வாடிக்கையாளர்களின் வட்டிகளைக் குறைக்க வேண்டும். அதுதான் முறையான நடவடிக்கை.

சமீபத்திய 6 மாதங்களில் ரிசர்வ் வங்கி 4 முறை ரெப்போ விகிதங்களை குறைத்து உள்ளது. முதல் 3 முறைகள் தலா 0.25 சதவீதமும், சமீபத்தில் 0.35 சதவீதமும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து எஸ்.பி.ஐ. உள்ளிட்ட சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வட்டிகளைக் குறைத்தன. ஆனால் பல தனியார் வங்கிகள் இன்னும் வரி குறைப்பை அறிவிக்கவில்லை!.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலையைப் போக்கவே ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. அந்நிலையில் சில வங்கிகள் இன்னும் வரிக் குறைப்பில் ஈடுபடாததால் ரிசர்வ் வங்கியின் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபிக்கி அமைப்பு நடத்திய வங்கியாளர்களின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், பொதுத் துறை வங்கிகளைப் போலவே தனியார் வங்கிகளும் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடன் மற்றும் டெபாசிட்டுகளின் வட்டிகளை நிர்ணயிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார். வங்கிகளின் நிதி நிலை நெருக்கடியில் இருப்பதால் அவற்றைக் கட்டாயப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆனால், ரிசர்வ் வங்கி தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் வேகமாக நடக்க வேண்டும் என்றும் வங்கிகள் இதை செயல் படுத்துகின்றனவா என்பது கண்காணிக்கப்படும் என்றும் அதற்குத் தக்கபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறினார்.

இதனால் வங்கிகள் விரைவில் வட்டிக் குறைப்புகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version