கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கோவை விமானநிலையம் விரிவாக்கம் பணிக்காக நில உரிமையாளர்கள் 13 பேருக்கு 1.60 கோடி ரூபாய் இழப்பீடு தொகை, 151 மாற்று திறனாளிகளுக்கு, 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வாகனம், உள்ளிட்ட பல்வேறுநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 80 பேருக்கு, 5.12 லட்சம் மதிப்பிலான நாட்டு கோழி குஞ்சுகளும் தரப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்றால் கோவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும்; விமான நிலைய விரிவாக்கத்திற்கு வீடு கொடுப்பவர்களுக்கு புதியாக நிலம் கொடுத்து அதில் வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த இருப்பதாகவும் கூறினார்.