நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேறுவது தள்ளிப்போக வாய்ப்பு

நிர்பயா வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என, குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், அக்சய் குமார் உள்ளிட்ட 4 பேருக்கும், பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. கடைசி வாய்ப்பாக தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விதமாக, குற்றவாளிகள் பல்வேறு சட்ட வழிமுறைகளை நாடியுள்ளனர். இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தும் வரை, தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்கிற டெல்லி சிறை விதிகள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை பிப்ரவரி 1ம் தேதி நிறைவேற்றுவது, தள்ளிப்போகும் என தெரிகிறது.

Exit mobile version