அன்னதானம் வழங்குவதில் 400 ஆண்டுகால பழக்க வழக்கம் மாற்றப்பட்ட விவகாரம் கிராம மக்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை அடுத்துள்ள மேல வாஞ்சூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள் திருமடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தின் போது இந்த மடத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது கிராம மக்கள் சார்பில், மடாலயத்திற்கு உள்ளேயே அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு விழாவில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கிராம மக்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இரு தரப்பினரும் மடாலயத்திற்கு வெளியிலேயே சமையல் செய்து அன்னதான நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் தலையீடு இருப்பதாகவும் அவரால் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவினரால் ஏற்பட்ட பிரச்சனையே ஊர் பிளவுபடுவதற்கு காரணமாக உள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.