காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்த புள்ளிமான்

கோவில்பட்டி அருகே, காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை வனப் பகுதியில், அதிகளவில் புள்ளி மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வந்து, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், கோவில்பட்டி சாலைப்புதூர் விலக்கில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில், புள்ளிமான் ஒன்று காயங்களுடன் தவித்து வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மான்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் குருமலை வனப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version