வங்க தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது

உலகக்கோப்பை தொடரின் 12வது லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ஓவர்களில் முடிவில் , 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை நிறைவு செய்து153 ரன்கள் எடுத்தார்

பின்னர், 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் சிறப்பாக ஆடிய சாஹிப் அல் ஹாசன் சதமடித்து அசத்தினார். 121 எடுத்த நிலையில் அவர் வெளியேறியதும் பின்னர் வந்த வீரர்கள் குறைந்த ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜேசன் ராய் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Exit mobile version