உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களில், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் ஏதும் எடுக்காமல், ஆட்டமிழந்தார். டேவிட் வார்னரும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், க்ரிஸ் வோக்ஸ் விசிய பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். காயத்துடன் ஆடிகொண்டிருந்த அலெக்ஸ் கேரி 46 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சற்று நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 22 ரன்களில், ஆர்ச்சர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, பேட் கம்மின்ஸை, ரஷித் 6ரன்களில் வெளியேற்றினார். தனி ஆளாக போராடி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்திய ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை கைப்பற்றிய கிரிஸ் ஓக்ஸ், அடுத்த பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார். 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது.