குற்றாலத்தில் சீசன் முடிவு. ஆனாலும், தண்ணீர் குறையவில்லை

குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் உற்சாகமாக குளித்து செல்கின்றனர். நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தே காணப்படுகிறது. மெயின் அருவி, புலி அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அருவிகளில் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர்.

Exit mobile version