உலகம் எல்லாவற்றிலும் நவீன மையம் ஆகி வருகிறது. வர்த்தகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என எல்லா துறையிலும் நவீன மையம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் திருட்டிலும் உலகம் நவீன மையம் ஆகிவிட்டது. மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு, அதிக புழக்கத்தில் இருந்த இந்த atm கொள்ளை, தற்போது இந்தியாவில் கால் வைத்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை தடுக்க பல வழிகளை அறிமுகப்படுத்தினாலும், நம்ம பங்கிற்கும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
நம்மில் பெரும்பாலானோர் atm சென்று, card swipe பண்ணி pin number போட்டு பணம் எடுத்து திரும்புறோம். ஆனால், அதற்கு முன் அந்த atm மெஷினில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை நம்மில் பெரும்பாலானோர் கவனிப்பதில்லை.
ஸ்கிம்மர் கருவி card swipe பண்ணுகிற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்கிம்மர் கருவி நம்மில் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் சிப்பில் சேமித்து கொள்ளும். அதே போல் நாம் டைப் பண்ணுகிற Pin நம்பரை ரெகார்ட் செய்ய ATM machine மேல ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த தகவலை கொண்டு, ஒரு போலி atm கார்டு உருவாக்கப்பட்டு நமக்கே தெரியாமலேயே நமது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. இந்த வகையான திருட்டு பற்றி நம்மில் பல பேருக்கு தெரிந்திருந்தாலும் அதை பற்றியான போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.
இந்த வகையான திருட்டை தடுக்க தற்போது இந்தியாவில் Chip card, Contactless card என இரு வகையான atm கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புது வகையான Chip card atm-ல், Encrypt-Decrypt method பயன்படுத்தப்பட்டுள்ளதால் எளிதில் நம்முடைய தகவலை திருட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
Contactless Card வகையான atm கார்டில், கார்டை swipe செய்யாமலேயே பணம் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த Contactless atm கார்டை ATM Machine-ல் இருக்கும் reader முன் காண்பிக்க வேண்டும். Contactless Card-ல் இருக்கும் wifi symbol மூலம் நம் வங்கி பரிமாற்றம் செய்யப்படும்.
அதாவது, Pin number போடாமலேயே பணம் (ரூ.2000 வரை) எடுத்து கொள்ளலாம். தற்போது வங்கிகள் அனைத்தும், இந்த இரு வகையான atm-யை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிவிறுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில், Contactless ATM Machine வெறும் 50% மட்டுமே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த இரு வகையான மூலமும் திருட்டை ஒழிப்பது கடினம் என்று வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Contactless ATM கார்டை நீங்கள் பாக்கெட்டிலோ, கைகளிலோ வைத்திருக்கும் போது, Card Reader மூலம் உங்களது தகவலை திருட முடியும். ஏனென்றால் Card Reader-க்கும் Contactless ATM Card-க்கும் இடையே 4 செ.மீ தொலைவு இருந்தால் போதும் உங்கள் தகவலை திருட முடியும். மேலும், இந்த வகையான நாம் மிஸ் பண்ணினால் என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.
1. நீங்கள் Pin நம்பரை டைப் செய்யும் போது ஒரு கையை Keypad-யை மறைத்து கொண்டு டைப் செய்ய வேண்டும்.
2.உங்கள் பணவரிவர்த்தனை முழுமையாக வெளியேறிவிட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.
3.உங்கள் பின் நம்பரை யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும்.
4.உங்களை தொடர்பு கொண்டு யாரவது, OTP அல்லது பின் நம்பர் கேட்டாலோ சொல்லக்கூடாது.
எது எப்படியாக இருந்தாலும், நாம் தான் பணம் எடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும்.