கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் யானைகள் ஊறுக்குள் வருவதை தடுக்க அகழிகள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், சில சமயங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை சீரமைக்கும் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வனத்துறை சார்பில் அகழியை தூய்மைப்படுத்தி , அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.