விளை நிலங்களை சேதப்படுத்தி வந்த கொம்பன் யானை பிடிபட்டது

கிருஷ்ணகிரி அருகே, இரண்டு மாதங்களாக போக்கு காட்டி வந்த கொம்பன் யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளதற்கு பொதுமக்கள் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 2 காட்டுயானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியது மட்டுமல்லமால் இருவரை கொன்றது. கொம்பன் யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானையை பத்திரமாக பிடித்துள்ளனர் வனத்துறையினர். மருத்துவ சிகிச்சை அளித்த பின்பாக எந்த பகுதியில் யானையை விடுவதென முடிவெடுக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது யானையின் நடவடிக்கையை கண்கானிக்க ரேடார் காலர் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக அச்சப்பட்டு வந்த பொதுமக்கள், கொம்பன் யானை பிடிக்கப்பட்ட தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் கோரிக்கையை ஏற்று கொம்பனை பிடித்த வனத்துறையினருக்கு பொது மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Exit mobile version