48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி, தமிழக அரசு சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்பட்ட 28 யானைகள் பங்கேற்றன. இந்த யானைகள் புத்துணர்வு முகாமில் தினமும் காலை, மாலை வேளைகளில் யானைகளுக்கு நடைபயிற்சியும், சத்தான உணவு வகைகளும், பசுந்தீவனம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. மேலும் காட்டு யானைகள், வளர்ப்பு யானைகளை தாக்காத வண்ணம் மின் விளக்குகளாலான வேலிகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.இந்தநிலையில், தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த இந்த சிறப்பு புத்துணர்வு முகாம், இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை, 4:00 மணி அளவில் லாரிகள் மூலம் யானைகளை ஏற்றிய பிறகு, நிறைவு விழா நடைபெற உள்ளது.