மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தனியார் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள் வழங்குவதை தடுப்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் 30க்கு மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை பென்மேனி அருகே உள்ள தனியார் பள்ளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது, இதையடுத்து, அங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் பள்ளியில் பணமோ, பொருளோ சிக்காத நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் குடியிருப்பு மற்றும் வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.