சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல் எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கப்படாது:மத்திய அரசு

சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல், சேலம் – சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கப்படாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version