இரும்பு பெண் என அழைக்கபடும் பிரான்சின் ஈபிள் டவர்

பிரான்ஸ் நாட்டில் “இரும்பு பெண்” என அழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற “ஈபிள் டவர்” 

உலக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஈபிள் டவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வானளாவிய உயரத்தில் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ஈபிள் டவரைக் காண வருவடத்திற்கு சுமார் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவிற்கு வருகை தரும் மக்கள் இந்த வரலாற்று புகழ்பெற்ற ஈபிள் டவரை காண தவறுவதில்லை. கடந்த 1889 ஆம் ஆண்டு பாரீஸ் உலக கண்காட்சியில் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.

1887 ஆம் ஆண்டு ஈபிள் டவரை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள், 2 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு முடிவு பெற்றது. ஈபிள் டவரை முழுவதுமாக வடிவமைக்க அரசிற்கு ஆன ஒட்டு மொத்த செலவு சுமார் 80 லட்சம் பிரான்ஸ் தங்க பிராங்குகள். ஈபிள் டவரின் ஒட்டுமொத்த உயர 324 மீட்டர்கள் ஆகும். இதில் உச்சத்தில் உள்ள ஆண்டெனா மட்டுமே 24 மீட்டர்கள் உயரம் கொண்டது. குறைவான கார்பன் கொண்ட வார்ப்பிரும்பினால் ஈபிள் டவர் கட்டப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் ஈபிள் டவர் அதிகப்படியான வெப்பத்தை உள்ளிழுத்துக் கொள்வதால் சுமார் 6 இன்ச் வரை வளர்கிறது. அதேபோல், குளிர்காலங்களில் அதே அளவு சுருங்கவும் செய்கிறது. இந்த மாற்றத்தை வெறும் கண்களால் காண முடியாது. இதேபோல் பலமாக காற்று வீசும் போது ஈபிள் டவரின் உச்சிப்பகுதி சுமார் 6 முதல் 7 மீட்டர்கள் வரை முன்னும், பின்னும் நகர்கிறது.

ஈபிள் டவரின் ஒட்டு மொத்த எடையானது சரியாக 10 ஆயிரம் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் விதமாகவும், நாட்டின் தொழிற்சாலை துறையின் வலிமையை காட்டவும் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் ஈபிள் டவர் கட்டப்பட்டது. 20 வருடங்களுக்கு கழித்து ஈபிள் டவரை அழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஈபிள் டவர் உலகப் பிரபலம் அடைந்ததால், அதை நீக்கும் எண்ணத்தை அந்நாட்டு அரசு கைவிட்டது.

ஈபிள் டவரின் உட்புறத்திலிருந்து மக்கள் மேல்நோக்கி செல்லும் வகையில் லிப்ட் வசதிகள் உள்ளன. இது மேலும், கீழும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஆண்டிற்கு 1 லட்சத்க்து 3,000 கிலோ மீட்டர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. ஈபிள் டவர் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை அதற்கு 18 முறை வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version