முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

ஒசூரிலிருந்து பேரிகை சாலையில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாகமலை.

இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வந்தனர்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலை இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.

உண்பதற்கு கூட உணவு இன்றி தவித்து வரும் இவர்கள், மலைகளில் கிடைக்கும் கிழங்கு உள்ளிட்டவற்றை உண்டு காலம் கழித்து வருகின்றனர்.

தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version