ஈரான் -அமெரிக்கா போர் பதற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து முன் எப்போதும் இல்லாத வகையில் சவரன் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரான் -அமெரிக்கா போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்கத்தின் விலை உயர்வது பொருளாதாரத்தில்  தாக்கம் ஏற்படுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால்  தங்கத்தின் விலை இரண்டே நாளில் சவரன்  30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 29 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்த ஒரு சவான் அணிகளன் தங்கம், அடுத்த 6 நாளில் கிடு கிடுவென உயர்ந்து  30 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிறது. இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 
தங்கம் விலை லண்டனில் நிர்ணயம் செய்யப்படாலும், அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் போது, தங்கம் விலை உயர்வதும், டாலர் மதிப்பு கூடும்போது தங்கத்தின் விலை குறைவதும் வாடிக்கையான ஒன்று என்று தங்க வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஹரிஹரன் என்ற பொருளாதார நிபுணர் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை மற்றும் கச்சா எண்ணையின் விலையும் அடுத்து உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.

தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்தால் பண வீக்கம் அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் போரால் உலக வர்த்தகமே ஆடிபோயுள்ள நிலையில்,  வல்லரசு நாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன் வரவேண்டும் என்ற போரிக்கை வலுத்துள்ளது.

Exit mobile version