மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பதிவு செய்யப்படாத கட்சியான அமமுகவிற்கு கடந்த இடைத் தேர்தலில், தொப்பி சின்னமும், அதன் பிறகு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில், குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என கோரி, அமமுக நீதிமன்றத்தை நாடியது.
ஆனால், பதிவு செய்யப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்க முடியாது என்றும், சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது பரிசுப்பெட்டி சின்னத்தை, அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.