உலக சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அசாமில் டுவைஜிங் (dwijing )திருவிழா நடைபெற்று வருகிறது.
அசாமில் சிராங் மாவட்டத்தில் உள்ள ஏய் நதிக்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக டிவைஜிங் திருவிழா நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் அஸ்ஸாம் மாநில பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி,பாட்டு, பாரம்பரிய குத்துச்சண்டை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.