கோடை வறட்சியை மிஞ்சியது சினிமாவில் லாபத்தின் வறட்சி

கோடை வெயில் வறட்சியையும் மீறியுள்ளது சினிமா வசூலில் வறட்சி… இதுகுறித்த சிறிய தொகுப்பை காணலாம்.

கோடை விடுமுறை என்றாலே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடம் பிடிப்பது இரண்டுதான். ஒன்று சுற்றுலா தளம், மற்றொன்று திரையரங்கங்கள். கோடை மாதத்தை கருத்தில் கொண்டு பல படங்கள் வெளியாகும். அவற்றில் வெற்றிப் படங்கள் எத்தனை என்பதை தற்போது விரல்விட்டு எண்ணி விடலாம் என்கின்றனர் திரை விமர்சகர்கள். இந்த ஆண்டு கோடையில் வெயிலால் ஏற்பட்ட வறட்சியை விட சினிமாவின் லாபத்தில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த கோடை விடுமுறையில் வெளியான படங்களை காட்டிலும், இந்தாண்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 20க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. குறிப்பாக சூர்யா, சிவகார்த்திகேயன், பிரபுதேவா உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றே தெரிகிறது. சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு சில லட்சங்களையாவது மீட்டுக் கொடுத்தது. மற்ற படங்கள் சில கோடிகளை நஷ்டப்படுத்தியது.

Exit mobile version