விழுப்புரத்தில் 8 லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக மக்களுக்கு வழங்கி சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு குவிகிறது.
சங்கீதமங்கலம் பகுதியை சேர்ந்த கருணாநிதி, அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மரக்கன்றுகளை ஓட்டுநர் கருணாநிதி இலவசமாக வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 8 லட்சம் மரக்கன்றுகளை அவர் இலவசமாக வழங்கியுள்ளதால், அந்த பகுதி மக்கள் அவரை மரம் கருணாநிதி என்றே அழைக்கின்றனர். இவருடைய இத்தகைய சமூகப் பணியினை கவுரவித்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பசுமை காவலன் என்ற விருதை ஓட்டுநர் கருணாநிதிக்கு வழங்கி பாராட்டியுள்ளார். வாழ்நாளில் 100 கோடி மரக்கன்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறும் கருணாநிதி, ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post