தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் திமுகவின் சூழ்ச்சி

300 ரூபாய் வழங்குவதாக கூறி டெல்லியில் பெண்களை போராட்டத்திற்கு அழைத்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி, வாக்குறுதி அளித்தபடி பணம் தராததால், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா. இவர் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, தலா 300 ரூபாய் பணம் தருவதாக கூறி பெண்களை திரட்டி டெல்லி தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளார்.

இதனிடையே பேசப்பட்ட பணம் தரப்படாததால், ஆத்திரமடைந்த அந்த பெண்கள் பணம் வழங்காத ஆன்னி ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பணம் தருவதாக கூறி தமிழே தெரியாத, எதற்காக இந்தப் போராட்டம் என்பதும் தெரியாத, அப்பாவி பெண்களை அழைத்து வந்து, பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து, கொடுமை படுத்தியுள்ளார் ஆன்னி ராஜா. இச்சம்பவத்தையடுத்து, தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் திமுக கூட்டணியின் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து தக்க பாடம் புகட்டுவார்கள் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version