கடவுள் இல்லை கூறுவதும், கடவுளின் பிரசாதமான குங்குமத்தையும், திருநீரையும் கூட வைத்து கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலினை தலைவராக கொண்ட தொண்டர்கள் கோயில் திருவிழாவில் மாலை மரியாதை கேட்டு தகராறு ஈடுபட்ட சம்பவம் மக்களை முகம் சுழிக்க வைத்தது.
திருச்சி மாவட்டம், துறையூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. வழக்கமான பூஜைகள் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாக மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முரளி, மற்றும் திமுக தொண்டர்கள் தேர் முன்புறம் நின்று கொண்டு தங்களுக்கும் மாலை மரியாதை செய்ய வேண்டும் என தகராறில் ஈடுபட்டனர். திமுகவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தாமதமானது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி மாலை மரியாதை கொடுக்க சென்றவர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் புறக்கணித்தார். தான் கேட்ட பிறகு தனக்கு மாலை மரியாதை செய்வதா எனவும், கேட்காமலே தன்னை அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் நீண்ட நேரம் பக்தர்கள் வெயிலில் காத்திருக்க நேரிட்டது. திமுகவினரின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை முகம் சுழிக்க செய்தது.