திமுகவினரின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திமுக தொண்டர்கள் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரசார வாகனத்தின் பின்னால் அதிக வேகமாக சென்று, பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். லோடு ஆட்டோவில் ஏற்றி வரப்பட்ட பெண்கள் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் பிரசாரம் செய்தனர். இதனிடையே, வாக்கு சேகரிக்க சென்ற திமுக கூட்டணி வேட்பாளர் செல்வம் பிரசாரத்தில் இருந்து பாதியில் விலகி பிரியாணி கடையில் அமர்ந்தது தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.