சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு குட்டையை குழப்புகிறார் ஸ்டாலின் : அமைச்சர் எம்.சி.சம்பத்

சிஏஏ விவகாரத்தில், சிறுபான்மை மக்களை தூண்டி விட்டு, ஸ்டாலின் குட்டையை குழப்புகிறார் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கடலூர் மத்திய மாவட்ட நகர கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளையும், திட்டங்களையும் பட்டியலிட்டார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் நடைபெறும் இந்த ஆட்சி வருகின்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும் என்றார்.

மேலும், காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கொண்டு வந்தது கடலூர் மாவட்டத்திற்கு மிகப்பெரிய சாதனை என்றும் இதற்காக, முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்தார். இந்த பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.

Exit mobile version