திருப்பத்தூரில் சாலை பணிகள் நடைபெற்று வரும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், முன்னறிவிப்பின்றி மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியினருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பாதள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது.
அதன்படி திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையின் 500 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ நல்லதம்பி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அக்கட்சியினருடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவ்வழியாக பணிக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமத்திற்குள்ளாகினர். பேருந்துகள் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பெயருக்காக போராட்டம் நடத்தியதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய திமுகவினரின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்ததுடன் அராஜ செயலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.