தோல்வியடைந்த விரக்தியில் தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்

திருச்சி மணப்பாறையில், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக பிரமுகர், அதிமுக ஒன்றிய செயலாளரை தாக்கியதை அடுத்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 7 வார்டில் அதிமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அழகர்சாமி தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த அழகர்சாமி மற்றும் திமுக ஆதரவாளர்கள், வெங்கடாசலம் வீட்டில் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து சம்பவம் அறிந்த அதிமுக தொண்டர்கள் வெங்கடாசலத்தை தாக்கிய அழகர்சாமி மற்றும் திமுக ஆதரவாளர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version